பிட்காயின் பற்றிய பொதுவான தகவல்கள்

பிட்காயின் என்பது டிஜிட்டல் பணம். இதை 2009-ம் ஆண்டு சடோஷி நகமோட்டோ என்பவரால் தொடங்கப்பட்டது. இதுவரை இவரை யாரும் அடையாளம் கண்டுகொண்டதில்லை. நாம் உபயோகிக்கும் பணத்தை அரசோ அல்லது அரசு சார்ந்த ரிசர்வ் பேங்கோ நிர்மாணிக்கும். பிட்காயின் அப்படிப்பட்டது அல்ல. இது யாருடைய கட்டுப்பாட்டின் கீழ் வருவதில்லை. இந்த காயினுக்கு உருவமோ அல்லது வடிவமோ கிடையாது. பரிவர்த்தனைக்கான சீக்ரெட் நம்பர் மட்டுமே இதற்கு உண்டு.

பிட்காயின் கணினி மூலம் உருவாக்கப்படுகிறது. சில சிக்கலான கணிதங்களை கணினி மூலம் நிவர்த்தி செய்வதன் மூலம் பிட்காயின் உருவாக்கப்படுகிறது. மொத்தம் 2 கோடியே 10 லட்சம் பிட்காயின்களை மட்டுமே உருவாக்க முடியும். இந்த வரம்புக்கு மேல் உருவாக்க முடியாது.

பிட் காயினை விற்கவோ, வாங்கவோ (பங்கு மார்க்கெட் போல ) நிறைய எக்சேஞ் நிறுவஙை்கள் உள்ளன.

இந்த நிறுவனங்கள் பரிவர்த்தனையை ஒரு பொதுவான லெட்ஞரில் பதிவு செய்யும். இந்த லெட்ஞர் பிளாக் செயின் என்று அழைக்கப்படும்.

எங்கு தொடங்குவது?
நீங்கள் பிட்காயின் வால்ட்டை(மணி பர்ஸ்) கணினி(https://www.myetherwallet.com ) அல்லது மொபைல் போனில்(

Bitcoin Wallet இன்ஸ்டால் செய்து) பிட்காயின் முகவரியை பெற்றுக் கொள்ளவும். பிட் காயின் முகவரி இ-மெயில் முகவரி போன்றது. இதை பரிவர்த்த்ததனைக் காக யாரிடத்திலும் ஷேர் செய்யலாம் . ஆனால் ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும். ஒவ்வொரு முறையும் பரிவர்த்தனைக்காக புதிய முகவரியை ஏற்படுத்திக் கொள்ளலாம். 


பரிவர்த்தனை 
பரிவர்த்தனை என்பது ஒரு பிட்காயின் வாலட்டில் இருந்து மற்றொரு வால்ட்டிற்கு  பிட்காயினை டிரான்ஸ்பர் செய்வதாகும் (வங்கி பரிவர்ந்தனை போல). 

ஒவ்வெரு பிட்காயின் வாலட்டும் 64 லெட்டர் மற்றும் நம்பரை உள்ளிடக்கிய ஒரு சீக்ரெட் கோடு ஒன்றை உங்களுக்கு அளிக்கும். இதை பத்திரமாக வைக்கவும். பரிவர்த்தனையை இந்த சீக்ரெட் கோடு மூலம் என்கிரிப்ட் செய்து கொள்ளும். அப்படி செய்தால் தான் ஹேக் செய்ய முடியாது. மேலும் பரிவர்த்தனை உங்களிடம் இருந்து தான் வந்தது என்பதை உறுதி செய்ய உதவும்.

உங்களின் சந்தேகங்கள், எப்படி வாங்குவது மற்றும் பாதுகாப்பு பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.

Comments

  1. The Sands Casino - Shootercasino
    In 1994, after the casino was founded, the ミスティーノ Sands began to fun88 soikeotot develop 샌즈카지노 new and innovative slot machines, and the casino was named the Official Owner: The S. R.I. Company

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இந்த ஆண்டு முதல் வருமான வரியை தவிர்ப்பது எப்படி?

பிட்காயின் குறித்த கேள்வி பதில்கள்