இந்த ஆண்டு முதல் வருமான வரியை தவிர்ப்பது எப்படி?

2019 ஆம் ஆண்டின் பட்ஜெட் தாக்கல் அறிவிற்பின் மூலம், தனிநபர் ஒருவர் ₹7.75 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவராக இருந்தால், வரி விலக்கு உள்ள பல்வேறு திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம்,  முற்றிலுமாக வரி செலுத்தாமல் வரி விலக்கு பெறலாம்.  இதன் விளைவாக ஆண்டுக்கு ₹15,080 அதிகமாக சேமிக்கலாம்.

எப்படி சேமிக்கலாம் என்று பார்ப்போம்.

முதலில் குறைந்தபட்ச வாழ்வாதாரத்திற்கான தேவையான ஸ்டாண்டர்ட் டிடக்சன் ₹40,000-லிருந்து ₹50,000 மாக உயத்தப்பட்டுள்ளது.

தனிநபரின் ஆண்டு வருமான வரி கணக்கீடு

தற்பொழுது (₹)

2019 பட்ஜெட் (₹)

மொத்த வருமானம்
7,75,000  
7,75,000  
அடிப்படை கழிப்பு
(Standard Deduction)
   (40,000)  
   (50,000)  
நிகர வருமானம்
7,35,000  
7,25,000  
இதர வருமானம்
 10,000  
10,000  
மொத்த வரி செலுத்தக்கூடிய 
வருமானம் (Gross Taxable Income)
7,45,000  
7,35,000  
பிரிவு 80C யின் கீழ் கழிப்பது
(1,50,000)  
(1,50,000)  
பிரிவு 80CCD(1B) யின் கீழ் கழிப்பது
(50,000)  
(50,000)  
பிரிவு 80D யின் கீழ் கழிப்பது
(25,000)  
(25,000)  
பிரிவு 80TTA யின் கீழ் கழிப்பது
(10,000)  
(10,000)  
மொத்த வருமானம் (கழித்தல் போக)
5,10,000  
5,00,000  
வருமான வரி
14,5000  
0  
கல்வி வரி (4%)
Education Cess
580  
-  
மொத்த வரி
15,080  
-  

சேமிப்பு
0  
15,080   

தனி நபர் ஒருவர் செக்சன் 80சியில் வரும் PPF, EPF முதலீடு செய்வது அல்லது குழந்தைகளின் கல்வி கட்டண செலவு மூலன் அதிகபட்சமாக ₹1.5லட்சம் வரையில் வருமானத்திலிருந்து குறைக்க முடியும். இதன் மூலம் வரி செலுத்தக்கூடிய வருமானம் ₹7.75 லட்சத்திருந்து ₹6.25 லட்சமாக குறையும்.

அடுத்து, தேசிய ஓய்வூதிய திட்டத்தின் 80CCD (1B) பிரிவின் கீழ் ₹50,000 ரூபாய் முதலீடு செய்யுங்கள்.

அடுத்து, உங்களுக்கும், உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் மருத்துவ காப்பீடு  எடுப்பதன் மூலம் (IIES) பிரிவு 80D யின் கீழ் ₹25,000 வரை பிரீமியம் செலுத்துவதன் மூலம் மொத்த வருவாயில் இருந்து ₹25,000 வரை குறைக்கலாம். பெற்றோர்கள் மூத்த குடிமகன்களாக இருந்தால் இந்த தொகை அதிகரிக்கும்.

பிற வட்டி வருவாய் (Fixed Deposit போன்று)  இருந்தால்  அதில் ₹10,000 ரூபாய் வரை பிரிவு 80TTA இன் கீழ் தள்ளுபடி செய்யப்படுவதன் மூலம் இதையும் வருமானத்திலிருந்து குறைக்கலாம்.

மேற்கூறிய வழிகளில் முதலீடு செய்வதன் மூலம் உங்களின் வரி செலுத்தக்கூடிய வருமானம் ₹5 லட்சமாக குறையும். இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது போல் ₹5 லட்சம் வரை வருமான வரி கிடையாது.

Comments

Popular posts from this blog

பிட்காயின் பற்றிய பொதுவான தகவல்கள்

பிட்காயின் குறித்த கேள்வி பதில்கள்