பிட்காயின் குறித்த கேள்வி பதில்கள்




  • பிட்காயின் என்றால் என்ன?

    பிட்காயின் என்றால் என்ன?

    இது நாணயம் அல்ல, ஆனால் விரிச்சுவல் நாணம் எனப்படும். தங்க நாணயம் போன்று இதற்கு உருவமோ, வடிவமோ, எடையோ கிடையாது. பேங்க் பாஸ்புக் போல பரிவர்த்தனைக் கான (transaction) என்ட்ரி மட்டுமே உங்களுக்கு கிடைக்கும் . கிரிப்டோ கரன்சிகளில் மிகவும் பிரபலமானது பிட்காயின் ஆகும். இதனை வைத்து பரிவர்த்தனையும் செய்ய முடியும், இந்த நெட்வொர்க் மிகவும் பாதுகாப்பு வசதியுடன் செயல்படுவதாகக் கூறப்படுகிறது.

பிட்காயின் வாங்குவது முறையான தா?

பிட் காயினை முறையான வழியிலும், முறையற்ற வழியிலும் வாங்கலாம். முறையான வழி என்றால் உங்கள் போட்டோ ஜடி, பான் கார்டு நம்பர் மற்றும் முகவரியை குடுத்து வாங்கலாம். முறையற்ற வழியில்வி நீங்கள் யார் என்பதை தெரியப்படுத்த வேண்டியதில்லை.

பிட்காயின் பாதுகாப்பானதா?

பிட் காயினை பரிவர்த்தனை உள்களிடம் உள்ள 64-bit சீக்ரெட் கோடு மூலம் என்கிரிப்ட்(encrypt) செய்யப்பட்டு மைனிங்(mining) எனப்படும் பிராசஸ்(process) மூலம் சரிபார்க்கப்படுகிறது. இந்த பிராசஸ்  சக்தி வாய்ந்த கணினி மூலம் செய்யப்படுகிறது. மேலும் சீக்ரெட் கோடு மூலம் நீங்கள் தான் பரிவர்த்தனை செய்தீர்கள் என்பதையும் உறுதி படுத்துகிறார்கள். இதை ஹேக் செய்வது கடினம்.

பிட்காயினை முழுவதுமாக தான் வாங்க வேண்டுமா?

பிட் காயினை நீங்கள்ப முழு காயினாக வாங்க வேண்டிய அவசியம் இல்லை. ₹100, ₹500, ₹1000, ₹1,00,000  என உங்களுக்கு தகுந்தாற்போல் நீங்கள் வாங்கலாம்.

 விற்கும் பொழுதும் அதே மாதிரி உங்களுக்கு தேவையானதை விற்றுக் கொள்ளலாம்.

பிட்காயின் ஒரு சூதாட்டமா(Gambling)?

குறுகிய காலத்தில், முதலீட்டில் நிறைய  சம்பாதிக்க நினைப்பவர்கள் தான் பிட்காயினில் முதலீடு செய்கிறார்கள். இது ஒரு சூதாட்டம் போன்றதுதான்.  இது ஒரு குதிரைப் பந்தய பெட்டிங் போன்றறதுதான். ஆனால் குதிரைப் பந்தயத்தில் அந்த குதிரையின்  ட்ரைனிங், முந்தைய அனுபவம் வைத்து ஓரளவுக்கு கணிக்கலாம். ஆனால் பிட்காயின் விலை ஏற்ற இறக்கம் கணிக்க முடியாதது.

பிட்காயினில் முதலீடு செய்ய எப்படிப்பட்ட மனநிலை வேண்டும்?

நீங்கள் முதலீடு செய்யும் பணம் திரும்ப வராது என்ற மனநிலையோடு தான் பிட்காயினில் முதலீடு செய்ய வேண்டும். இது அனைத்து வகையான முதலீடுகளுக்கும் பொருந்தும். ஆனால் மற்ற முதலீடுகளில் உங்களுக்கு ஓரளவேனும் ரிஸ்க், விஷயம் தெரிந்திருக்கும்.

பிட்காயின் முதலீடு எப்படி பங்கு சந்தையில் இருந்து மாறுபட்டது?

பங்கு சந்தையில்  நீங்கள் முதலீடு செய்வது ஒரு நிறுவனத்தின் மீது . நம்பிக்கையான மேனேஜ்மென்ட், நம்பிக்கையான விற்பனை, வாடிக்கையாளர், லாபம்/ நஷ்டம் இதையெல்லாம் பார்த்து படித்து முதலீடு செய்வீர்கள். நிறுவனத்தின் செயல்பாட்டை பொருந்து பங்கு விலை ஏற்றம் இறக்கம் காணும். பிட்காயின் அப்படிப்பட்டது அல்ல. இதன் விலை சப்ளை(supply) /டிமாண்ட்டின் (demand) அடிப்படையிலே நீர்நயம் செய்யப்படுகிறது. விற்பவர்களின் எண்ணிக்கை வாங்குபவர்களின் எண்ணிக்கையை விட குறைவு அதுதான் விலையை தீர்மானிக்கிறது.

பிட்காயினை வேறு எங்கு பயன்படுத்தலாம்?

பிட்காயினை வேறு சில பரிவர்த்தனைக்கும் பயன்படுத்தலாம். Microsoft, Amazon, Flipcart மற்றும்ப பல நிறுவனங்கள் பிட்காயினை ஒரு பேமண்ட்டை நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள்.  இங்கு எல்லாம் பிட்காயின் மூலம் பொருளோ அல்லது சேவையோ பெற முடியும். 

  • இந்தியாவில் பிட் காயின் எங்குக் கிடைக்கும்?

    இந்தியாவில் 11 தளங்கள் பிட்காயினை முதலீட்டைப் பெற்று நிர்வகிக்கின்றன. அவை
    Unocoinhttps://www.unocoin.com/
    BuyUCoinhttp://www.buyucoin.com/index.html
    ZebPayhttps://www.zebpay.com/
    Coinsecurehttps://coinsecure.in/
    LocalBitcoins(உங்களின்
    விபரங்களை குடுக்காமல்
    பரிவர்த்தனை செய்யலாம்)
    https://localbitcoins.com/

  •  
  • என்ன விலை கொடுத்து வாங்கலாம்?


  • உலகளவில் பிட்காயினின் மதிப்பு பல மடங்கு உயர்ந்து $18,000 (கிட்டத்தட்ட 11.7 லட்ச ரூபாய்) எட்டி இப்பொழுது $16,000 க்கும் குறைவாக வர்த்தகம் ஆகிறது. ரூபாய் மதிப்பில் 1 பிட்காயின் கிட்டத்தட்ட 10 லட்சம் ரூபாயாகும். இதன் மதிப்பு நிமித்திற்கு நிமிடம் மாறிக்கொண்டே உள்ளது
  • இந்தியாவில் பிட்காயினை எங்கு எல்லாம பயன்படுத்த முடியும்?

    தற்போது வரை பிட்காயினைப் பரிய அளவில் பயன்படுத்த கடைகள் இல்லை. ஆனால் இ-காமர்ஸ் நிறுவனங்களான பிளிப்கார்ட், அமேசான் மற்றும் மேக் மை டிரிப் நிறுவனங்கள் பிட்காயினைப் பரிவர்த்தனைக்காக ஏற்கின்றனர்.

  • இந்தியாவில் தற்போது வரை எவ்வளவு பிட்காயின் வாங்கப்பட்டுள்ளது?

    இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் 200 முதல் 250 கோடி வரை பிட்காயினில் முதலீடு செய்து வருகின்றனர்.
  • பிட்காயின் போன்று வேறு கிரிப்டோ கரன்சிகள் உள்ளனவா?

    Ethereum, Litecoin, Dash மற்றும் Rippl போன்றவையும் பிட்காயின் பொன்ற பிரபல கிரிப்டோ கரன்சிகள் ஆகும். விலையில் மாற்றங்கள் உண்டு.
  • உலகளவில் எவ்வளவு பேர் பிட்காயினைப் பயன்படுத்துகிறார்கள்?

    உலகம் முழுவதும் பிட்காயினில் 3 கோடிக்கும் அதிகமானவர்கள் முதலீடு செய்துள்ளார்கள்.
  • எந்த அளவில் பிட்காயினிக்கு மதிப்பு உள்ளது?

    2013-ம் ஆண்டுப் பிகாயினில் முதலீடு செய்த ஒருவர் டெஸ்லா எஸ் மாடல் காரை 92 பிட்காயின் கொடுத்து வாங்கியுள்ளார் என்றால் பாருங்கள். டெஸ்லா எஸ் மாடல் கார் ஒன்று 1,00,000 டாலர் விலை ஆகும்

Comments

Popular posts from this blog

பிட்காயின் பற்றிய பொதுவான தகவல்கள்

இந்த ஆண்டு முதல் வருமான வரியை தவிர்ப்பது எப்படி?